/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலை
/
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலை
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலை
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலை
ADDED : பிப் 04, 2024 04:44 AM
கள்ளக்குறிச்சி : பாரில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் மோகன்ராஜ், 33; சின்னசேலம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் விஜயா வீட்டில் தங்கியிருந்த இவர், நேற்று மாலை 5:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள தனியார் பாரில் மது அருந்தினார்.
அப்போது மோகன்ராஜிக்கும், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த கும்பல், பீர்பாட்டிலால் மோகன்ராஜை தாக்கி விட்டு காரில் தப்பி சென்றது.
தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் பாருக்கு அருகில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தது தெரிந்தது. அதன்பேரில் போலீசார், லாட்ஜிக்கு சென்று மாற்று சாவி மூலம் தாக்குதல் நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். அறையில் 20 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், சின்னசேலத்தை சேர்ந்த ஒருவரது அடையாள அட்டையை பயன்படுத்தி லாட்ஜில் தங்கியதும் தெரிந்தது.
இதனையடுத்து மர்ம நபர்கள் யார், எதற்காக தங்கியிருந்தனர் என்பது குறித்தும், பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.