/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேவர் படத்திற்கு மாலை அணிவிப்பு
/
தேவர் படத்திற்கு மாலை அணிவிப்பு
ADDED : அக் 31, 2025 11:27 PM

உளுந்துார்பேட்டை: அகில பாரத இந்து மகா சபா சார்பில் தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் பெரிசெந்தில் தலைமை தாங்கி தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில செயலாளர் சபரிராஜன், வடக்கு மண்டல தலைவர் அருள், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவதேவன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் மோதகபிரியன், கடலுார் மாவட்ட துணை தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி மகேஸ்வரன், நிர்வாகிகள் குமார், தினேஷ், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

