
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொது மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஊராட்சி தலைவர் கோமதி சுரேஷ் தலைமை தாங்கினார். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், சேலம் தனியார் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களை பரிசோதனை செய்தனர்.
முகாமில், காய்ச்சல், சளி, தலைவலி, ரத்தகொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமா, உடல்வலி, எலும்பு மற்றும் மகப்பேறு தொடர்பான நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. 90 பேர் பயனடைந்தனர்.