/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 02, 2024 11:56 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த துரிஞ்சிப்பட்டு கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருப்பாலபந்தல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட துரிஞ்சிப்பட்டு கிராமத்தில் போலீசார் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை காவலர் தனசேகர் தலைமை தாங்கினார். கோகிலா பொதுமக்கள் மத்தியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், போதைப் பொருள் தடுப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், இதனை தடுக்க சட்ட நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.