/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கேரளாவிற்கு வேலைக்கு சென்ற சிறுமி மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
கேரளாவிற்கு வேலைக்கு சென்ற சிறுமி மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு
கேரளாவிற்கு வேலைக்கு சென்ற சிறுமி மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு
கேரளாவிற்கு வேலைக்கு சென்ற சிறுமி மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 25, 2024 06:39 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கேரளாவுக்கு வேலைக்கு சென்ற சிறுமியை போலீசார் மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
உளுந்துார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது பெற்றோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
இவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி அப்பகுதியில் உள்ள ஏஜென்ட் மூலம் கடந்த 10 மாதங்களுக்கு முன், வீட்டு வேலைக்காக கேரளா சென்றார்.
இதனிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவரை தொடர்பு கொள்ள முடியாததால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவரது தாய் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தர். அதன்பேரில் எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமி கேரளாவில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி மற்றும் போலீசார் கேரளா விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின், அவரை எலவனாசூர்கோட்டைக்கு அழைத்து வந்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.