/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை வார சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
உளுந்துார்பேட்டை வார சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்துார்பேட்டை வார சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்துார்பேட்டை வார சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : அக் 16, 2025 02:30 AM

திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை சேலம் சாலையில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை நடப்பது வழக்கம். தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு விற்பனை அதிக அளவில் நடக்கும். வழக்கம் போல் நேற்று காலை சந்தை துவங்கியது.
வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், நேற்றைய சந்தையில் உளுந்துார்பேட்டை மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வந்தனர். சந்தைக்கு வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள் ஒன்று ரூ. 8 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் 2 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.