/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழா
/
ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழா
ADDED : ஆக 18, 2025 12:28 AM
சங்கராபுரம்; அரசம்பட்டு ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவை யொட்டி, மாயவன் தலைமையிலான பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி, முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தனர். அப்போது, குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. யாதவர் சங்க தலைவர் ரவி, செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ராவணன், ரங்கநாதன், செந்தில்முருகன், சவுந்தர்ராஜன், குகன், ஏழுமலை, மாயக்கண்ணன், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை கோபாலகிருஷ்ணன் சுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகார பவனி நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணன் வேடமணிந்து பஜனை குழுவினருடன் கோவிலை வலம் வந்தனர். முன்னதாக உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா தலைவர் அரவிந்த் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.