/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை: கலெக்டர் அறிவுறுத்தல் கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : ஏப் 04, 2025 04:39 AM

கள்ளக்குறிச்சி: சமூக பாதுகாப்பு திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசு உதவித் தொகை சென்று சேர்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்பு, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோல, முதல்வரின் முகவரி துறையின் கீழ் வரப்பெற்ற நிலுவை மனுக்கள், தீர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்தில் நடக்க உள்ள, 'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட முகாம் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து பயனாளிளுக்கும் அரசின் உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.