/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி மாணவி சிலம்பம் தற்காப்பு பயிற்சியில் சாதனை
/
அரசு பள்ளி மாணவி சிலம்பம் தற்காப்பு பயிற்சியில் சாதனை
அரசு பள்ளி மாணவி சிலம்பம் தற்காப்பு பயிற்சியில் சாதனை
அரசு பள்ளி மாணவி சிலம்பம் தற்காப்பு பயிற்சியில் சாதனை
ADDED : டிச 20, 2024 05:18 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி மோனிகா சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றுவந்தார்.
இவர் வீரம் விளையாட்டு அறக்கட்டளை சார்பில் நடத்தும் இலவச பயிற்சியில் கலந்து கொண்டு உலக அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இரண்டாமிடமும், மாநில அளவில் நடந்த சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சியில் நான்கு முறை முதல் இடத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 5 முறை வெற்றி பெற்றும் சாதனை படைத்துள்ளார்.
மாணவி மற்றும் இலவச பயிற்சி அளித்த அண்ணாமலை, வின்சென்ட் ஆகியோரையும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.