/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 11 பேர் காயம்
/
அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 11 பேர் காயம்
ADDED : நவ 10, 2024 06:41 AM
சின்னசேலம், : மேலுார் கிராமத்தில் அரசு டவுன் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சியிலிருந்து அரசு டவுன் பஸ் நேற்று மாலை 5.00 மணியளவில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஈரியூர் நோக்கி சென்றது. பஸ்சை, கடத்துார் கிராமத்தை சேர்ந்த ராஜா,55; என்பவர் ஓட்டினார். வானவரெட்டி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், 32 ;நடத்துனராக உடன் சென்றார்.
நேற்று மாலை 5.45 மணியளவில் பொற்படாக்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்ற போது எதிரே கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்ஸிற்கு வழி விடுவதற்காக, டிரைவர் சாலையின் இடது புறம் திருப்பியுள்ளார்.
அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்தனர். இதில் மேலுார் கிராமத்தை சேர்ந்த இந்துமதி, 13; சுவேதா, 16; அன்னப்பூவால், 50; ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.