/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் பட்டம் 'வினாடி - வினா' போட்டி
/
ஆர்.கே.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் பட்டம் 'வினாடி - வினா' போட்டி
ஆர்.கே.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் பட்டம் 'வினாடி - வினா' போட்டி
ஆர்.கே.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் பட்டம் 'வினாடி - வினா' போட்டி
ADDED : டிச 11, 2025 05:55 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்-பட்டம் இதழ்' சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி நேற்று நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் பங்கேற்ற 50 மாணவ, மாணவிகளில் சரியான பதில் எழுதிய 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி நேற்று நடத்தப்பட்டது.
பள்ளி முதல்வர் தனலட்சுமி தலைமை தாங்கினார். 3 சுற்றுகளாக நடந்த வினாடி வினா போட்டியில் பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பதிலளித்தனர்.
போட்டியின் இறுதியில் 'ஜி' மற்றும் 'பி' அணியினர் தலா 25 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இதையடுத்து, இரண்டு அணிகளுக்கு மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டது. முடிவில், 'ஜி' அணியை சேர்ந்த விஷ்ணுவரதன், முகேஷ் ஆகியோர் 30 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், 'பி' அணியை சேர்ந்த ஹசைன், மித்திரன் ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.
முதலிடம் பெற்ற மாணவர்கள் விஷ்ணுவரதன், முகேஷ் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழும், இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள் ஹசைன், மித்திரன் ஆகியோருக்கு வெற்றி பதக்கம், சான்றிதழும் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் திரிபுரசுந்தரி, சந்தோஷ்குமார், நீலகண்டன், ராகேல்ஜாய்ஸ்மேரி மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

