/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்புக் கூட்டம்533 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம்533 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜூன் 02, 2025 11:06 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 533 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 வாரங்களுக்கு பிறகு பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பட்டா மாற்றம், வீட்டு மனை பட்டா கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை வசதி ஏற்படுத்தி தருதல் என்பது உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த 533 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி, உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.