/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்புக் கூட்டம்; 690 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம்; 690 மனுக்கள் குவிந்தன
ADDED : ஏப் 08, 2025 06:33 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 690 மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார்.
கூட்டத்தில், நிலப்பட்டா, பட்டா மாற்றம், வீட்டு மனை வழங்க கோரிக்கை, இடத்தை அளவீடு செய்தல், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை, குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தருதல் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த 690 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், உளுந்துார்பேட்டை தாலுகா, வண்டிப்பாளையம் கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி திட்டத்தில் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜீவா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

