ADDED : டிச 09, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று (9ம் தேதி) நடைபெறுவதாக இருந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறாது என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று 9ம் தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம், புயல், மழை நிவாரண பணி மற்றும் பயிர் சேத கணக்கெடுப்பு காரணமாக நடைபெறாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.