7 போர்களை நிறுத்திவிட்டேன்; இது மட்டும் முடியவில்லை: டிரம்ப்
7 போர்களை நிறுத்திவிட்டேன்; இது மட்டும் முடியவில்லை: டிரம்ப்
ADDED : ஆக 23, 2025 08:04 AM

வாஷிங்டன்: உலகில் 7 போர்களை நிறுத்திய எனக்கு, ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர் இன்னமும் ஓயவில்லை. இருநாடுகள் இடையே போர் நிறுத்தத்தை எப்படியும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனாலும் இரு நாடுகள் இடையே தீர்வு எட்டப்படவில்லை.
இந் நிலையில், உலகில் 7 போர்களை நிறுத்திய எனக்கு, ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது;
புடினும், ஜெலன்ஸ்கியும் இணைந்து செயல்படுவார்களா என்று நாங்கள் பார்த்து வருகிறோம். வெளிப்படையாக காரணங்களுக்காக அவர்கள் நன்றாக பழகுவது இல்லை. இருவருடனும் நானும் இருக்க வேண்டுமா இல்லையா என்பது பின்னர் பார்ப்போம்.
இருவரும்(புடின்-ஜெலன்ஸ்கி) சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து சண்டையிடுகிறார்கள். மக்களை கொல்கின்றனர். இது மிகவும் முட்டாள்தனமானது.
நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். இதையும் (ரஷ்யா-உக்ரைன் போர்) நிறுத்த விரும்புகிறேன். ஆனால் அது மிகவும் கடினமானதாக மாறி வருகிறது.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.