ரிஷிவந்தியம் ; வாணாபுரம் அடுத்த திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாரதிதாசன், அறங்காவலர்குழு தலைவர் பாலாஜி பூபதி முன்னிலை வகித்தனர்.
கோவிலில் ரூ.42.50 லட்சம் மதிப்பில் பசுமடம், ரூ.86.50 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி, ரூ.29.20 லட்சம் மதிப்பில் பணியாளர் குடியிருப்பு மற்றும் ரூ.49 லட்சம் மதிப்பில் அன்னதானக்கூடம் என மொத்தமாக ரூ.2 கோடியே 72 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார். அப்போது, நிர்வாகி ராஜீவ்காந்தி, கோவில் குருக்கள் ரங்கநாத பட்டாட்சியர், அறநிலையத்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.