/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குரூப் 1 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு
/
குரூப் 1 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு
ADDED : மே 20, 2025 06:46 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்விற்கு மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வுகள் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2025ம் ஆண்டு திட்ட நிரலின் 70 காலி பணிடங்களுக்கு குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடக்கிறது.
மாணவர்கள் இத்தேர்வுக்கு தயாராகும் வகையில் மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வுகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளது.
மாதிரி தேர்வுகள் மே 27, ஜூன் 3, 7 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் மற்றும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் ஆகிய விபரங்களுடன் கள்ளக்குறிச்சி, நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு வரும் 23ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.