/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உயர்கல்வி குறித்த ஆலோசனைக்கு வழிகாட்டி; திட்ட கட்டுப்பாட்டு அறை கலெக்டர் பிரசாந்த் தகவல்

ADDED : ஜூன் 10, 2025 10:07 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளைப் பெற, உயர்கல்வி வழிகாட்டி திட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்குவதற்காக, உயர்கல்வி வழிகாட்டி திட்ட கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
ஆலோசனைக் குழுவில் துணை கலெக்டர் தலைமையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பன்முகத் துறைகளின் நிபுணர்கள் உள்ளனர்.
எனவே 10 மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உயர்கல்வி வழிகாட்டி திட்ட கட்டுப்பாட்டு அறை 81223 09830 மற்றும் 04151 -228802 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளைப் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.