ADDED : மே 12, 2025 02:22 AM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியையொட்டி, நேற்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
மதியம் சிறப்பு ஹோமம், குரு பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும், வெள்ளிக்கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, மதியம் 1:19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும் நேரத்தில், குரு பகவானுக்கு தீபாராதனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
