ரூ. 34,000 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டங்கள்; நவ.21ல் 3 மாநிலங்களுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி
ரூ. 34,000 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டங்கள்; நவ.21ல் 3 மாநிலங்களுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி
ADDED : நவ 20, 2026 05:21 PM

நவ.21ம் தேதி பிரதமர் மோடி, மேற்கு வங்கம், பீஹார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களுக்குச் செல்கிறார். மேற்கு வங்கத்தில் ஐஐடி கோரக்பூர் பவள விழாவிலும், பீஹாரின் வைஷாலியில் ரூ.34,000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
நவம்பர் 21ம் தேதி மேற்கு வங்கம், பீஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.
நிகழ்ச்சி விவரங்கள்;
மேற்கு வங்கத்தில் ஐஐடி கோரக்பூர் கல்வி நிறுவன பவள விழா கொண்டாட்டங்கள்.
பீஹார் வைஷாலியில் ரூ.34,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான முக்கிய திட்டங்கள் தொடங்கி வைத்தல் மற்றும் அந்த திட்டங்களின் அடிக்கல் நாட்டுதல்.
உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் திறன் மேம்பாடு தொடர்பான கவுசல் தீக்ஷாந்தத் சமரோஹ்.
இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
