நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த கையெழுத்து இயக்க போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார். இதில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையை 140யை திரும்ப பெற வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிர்வாகித்து பராமரித்திட வேண்டி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.