/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் அனுமன் ஜெயந்தி விழா
/
கள்ளக்குறிச்சியில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : டிச 31, 2024 06:50 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் தொடர்ந்து தீபாராதனை மற்றும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது.
பின்னர் சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டது.
பூஜைகளை அர்ச்சகர் சங்கர் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல், கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் ஆஞ்சநேயர் கோவில், கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில், நீலமங்கலம் ராமர் கோவில், ஆரா பெருமாள் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.