/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
/
குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
ADDED : ஆக 23, 2025 05:38 AM

மூங்கில்துறைப்பட்டு,: மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரில் சுமார் 100க்கு மேற்பட்ட குடியிருப்பு உள்ளன. இப்பகுதி மக்கள் வீடுகளில் சேரும் குப்பைகள் மொத்தமாக ஒரே இடத்தில் கொட்டி வைக்கின்றனர்.
அதனை ஊராட்சி நிர்வாகம் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பைகளை அகற்றி செல்கிறது.
இதனால் வாரம் முழுதும் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவது, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 2 நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி குப்பையை தினசரி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.