ADDED : ஏப் 21, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றுப்பாலத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் இருந்து ரோடுமாமாந்துார் செல்லும் சாலையின் குறுக்கே கோமுகி ஆற்று பாலம் உள்ளது. அங்கு நகர பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து பாலத்தின் ஓரப்பகுதியில் கொட்டுகின்றனர்.
குறிப்பாக, அங்கு வீசப்படும் இறைச்சி கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் அபாயமும் அதிகரித்துள்ளது.
அந்த பகுதியில் குப்பைகள் வீசுவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

