/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எடைப்பணி தொழிலாளர்கள் சங்க துவக்க விழா
/
எடைப்பணி தொழிலாளர்கள் சங்க துவக்க விழா
ADDED : மே 11, 2025 04:14 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த எடைப்பணி தொழிலாளர்கள் சங்க விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில், 17 ம் ஆண்டு துவக்க விழா, கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் நடந்தது.
தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்பிரமணி, துணை செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தனர்.
செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சரவணன் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கஜேந்திரன், நகர செயலாளர் செந்தில் வரவேற்று பேசினர்.
இதில் பாக்கியநாதன், ஆறுமுகம், கண்ணன், அண்ணாதுரை பழனி, ரவிச்சந்திரன், முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

