ADDED : ஆக 24, 2025 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் போலீஸ் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்ததுடன், ஹெல்மெட் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சப்இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், பிரதாப், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.