/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மனு
/
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மனு
ADDED : ஏப் 09, 2025 08:43 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் லோடு வேன் வாகன தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் அருண் தலைமையில் நகர செயலாளர்கள் முருகன், சேகர், டாடா ஏஸ் ஸ்டேண்ட் தலைவர் செல்வம், நிர்வாகிகள் மோகன்தாஸ், சுரேஷ் உள்ளிட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
நகரில் உள்ள துருகம் சாலையில் கடந்த, 20 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனை அருகே ஸ்டேண்ட் அமைத்து, 35க்கும் மேற்பட்டோர், லோடு வேன் ஓட்டி வந்தோம்.
தற்போது அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடப்பதால், வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் எங்களுக்கு அதே சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் மாற்று இடத்தில் ஸ்டேண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

