
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் தீர்த்தமலை வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், பிரவீன் குமார், ஆனந்த், சங்கர்கணேஷ், கண்ணன், ஒன்றிய துணைத் தலைவர்கள் மகேந்திரன், சண்முகம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து உரையாற்றினார். நுாற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் கலந்து கொண்டனர். மணலுார்பேட்டை நகர செயலாளர் ராமு நன்றி கூறினார்.

