/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஹிந்து முன்னணி அமைப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
/
ஹிந்து முன்னணி அமைப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
ஹிந்து முன்னணி அமைப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
ஹிந்து முன்னணி அமைப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
ADDED : செப் 25, 2024 06:40 AM
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
கல்வராயன்மலை, கருமந்துறை தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு சேலம் மாவட்ட செயலாளர் பிரசாந்த், கள்ளக்குறிச்சி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினர். மாவட்ட பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சின்னசாமி, லட்சுமணன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மணலி மனோகர் சிறப்புரையாற்றினார்.
கல்வராயன்மலை ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கல்வராயன்மலை ஒன்றியத்தில் ஹிந்துக்களுக்கு ஒற்றுமையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
கல்வராயன்மலை ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் பங்கேற்றனர்.