UPDATED : அக் 11, 2026 06:52 PM
ADDED : அக் 11, 2026 06:07 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் திருக்கோவிலுாரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் மண்டலம் சார்பில், திருக்கோவிலுார் பஸ் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தீர்த்தமலை முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமு வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
