/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதிதிருவரங்கம் கோவில் கும்பாபிஷேகம்; விரைந்து நடத்த இந்து முன்னணி தீர்மானம்

ADDED : ஜன 22, 2025 11:39 PM

திருக்கோவிலூர்; கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில், திருக்கோவிலூர் மண்டல பொதுக்குழு கூட்டம் மணலூர்பேட்டையில் நடந்தது.
கூட்டத்திற்கு நகர துணைத் தலைவர் ராமு வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர துணைத் தலைவர் அப்பாஸ், மாவட்ட செயலாளர் ராமராஜன் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் மணலி மனோகர்ஜி, மாவட்ட பொறுப்பு செயலாளர் சக்திவேல் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மணலூர்பேட்டை, பகண்டை கூட்டு சாலையில் செயல்படும் சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற வேண்டும். ஆதிதிருவரங்கம், மணலூர்பேட்டை பெருமாள் கோவில்களில் திருப்பணி விரைவாக முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் வரும் காலங்களில் இறைச்சிக்கடைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பரணி நன்றி கூறினார்.