/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாடுகளை திருடிய இறைச்சிக் கடைக்காரர் மீது கால்நடைகள் வதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை இந்து மகா சபா கோரிக்கை

ADDED : ஜூலை 08, 2025 10:49 PM

உளுந்துார்பேட்டை; எலவனாசூர்கோட்டையில் மாடுகளை திருடி இறைச்சி கடையில் விற்பனை செய்த, கடை உரிமையாளர் மீது கால்நடைகள் வதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இந்து மகா சபா நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் மாடுகளை திருடி இறைச்சி கடை உரிமையாளர் அஷரப்அலி, இறைச்சியாக விற்று வந்தார். இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், நேற்று முன் தினம் மாடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்தும், மாடுகளை திருடி விற்ற இறைச்சி கடை உரிமையாளரை கைது செய்ய கோரி ஆசனுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
எலவனாசூர்கோட்டை போலீசார் முக்கிய குற்றவாளியான கடை உரிமையாளர் அஷ்ரப்அலியை தவிர்த்து, மற்ற மூன்று பேரை கைது செய்தனர்.
இதனை அறிந்த இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் பெரிசெந்தில் தலைமையிலான நிர்வாகிகள் எலவானசூர்கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீத்தை சந்தித்து அளித்த மனுவில், மாடு திருடி இறைச்சியாக மாற்றி விற்பனை செய்த, இறைச்சி கடை உரிமையாளர் அஷ்ரப்அலியை உடனே கைது செய்யவேண்டும். அவர் மீது கால்நடைகள் வதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதி அளித்தார்.
இந்து மகா சபா மாவட்ட தலைவர் சபரிராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் இளஞ்செழியன், மாவட்ட ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர் பாரதிராஜன், மாவட்ட ஆலய பாதுகாப்பு பிரிவு செயலாளர் ஜோதிலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்றல், மாவட்ட பொது செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் உடன் வந்தனர்.