/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
/
இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
ADDED : ஏப் 15, 2025 09:01 PM

திருக்கோவிலுார்; இந்து முன்னணி திருக்கோவிலுார் மண்டல செயற்குழு கூட்டம், சந்தைப்பேட்டையில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தீர்த்தமலை வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராமராஜன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மனோகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் பேசினர்.
கூட்டத்தில், ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அதிக பக்தர்களை பங்கேற்க வைப்பது. ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோவில், மணலுார்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணியை விரைவாக முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்ந நிறைவேற்றப்பட்டன.
நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

