/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாராயம் காய்ச்ச வெல்லம் பதுக்கல் ; கள்ளக்குறிச்சி எஸ்.பி., எச்சரிக்கை
/
சாராயம் காய்ச்ச வெல்லம் பதுக்கல் ; கள்ளக்குறிச்சி எஸ்.பி., எச்சரிக்கை
சாராயம் காய்ச்ச வெல்லம் பதுக்கல் ; கள்ளக்குறிச்சி எஸ்.பி., எச்சரிக்கை
சாராயம் காய்ச்ச வெல்லம் பதுக்கல் ; கள்ளக்குறிச்சி எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : அக் 03, 2025 01:51 AM

கள்ளக்குறிச்சி; கல்வராயன்மலையில் வெல்லம் தயாரித்து பதுக்கி வைத்துள்ள நபர்கள், தாமாக முன்வந்து ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் விவசாயிகள் சிலர் தங்களது விளை நிலங்களில் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். அவ்வாறு கரும்பு பயிரிடும் விவசாயிகள் அறுவடை செய்து, கச்சிராயபாளையம், மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கல்வராயன்மலை கரும்பு விவசாயிகள் சிலர் தங்கள் நிலங்களில் பயிரிட்ட கரும்பினை வெல்லம் தயாரித்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்ச விற்று வந்தனர்.
இவற்றை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், கரியாலுார் காவல் நிலைய போலீசார் கண்டுபிடித்து பதுக்கிய நபர்களை கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது கல்வராயன்மலையில் தொடர் மதுவிலக்கு சோதனை நடதப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறையின் மூலம் கல்வராயன்மலையில் உள்ள கிராம பொதுமக்களிடம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெல்லத்தை தாமாக முன்வந்து ஒப்படைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, புளியந்துரை கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னிடம் உள்ள 1,200 கிலோ வெல்லத்தை அழிக்க வேண்டிய தானே முன்வந்து ஒப்படைத்தார். தொடர்ந்து அவரிடம் வெல்லம் கைப்பற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டது.
மேலும், தாமாக முன்வந்து வெல்லத்தை ஒப்படைத்த விவசாயி மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுபோல் விவசாயிகள் யாரேனும் வெல்லம் பதுக்கி வைத்திருந்தால் தாமாக முன்வந்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.