sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

செங்கனாங்கொல்லையில் துணை மின் நிலைய பணி துவக்கம்! விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றம்

/

செங்கனாங்கொல்லையில் துணை மின் நிலைய பணி துவக்கம்! விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றம்

செங்கனாங்கொல்லையில் துணை மின் நிலைய பணி துவக்கம்! விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றம்

செங்கனாங்கொல்லையில் துணை மின் நிலைய பணி துவக்கம்! விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றம்


ADDED : அக் 03, 2025 01:55 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் பகுதியின் மின் தேவையை பூர்த்தி செய்ய செங்கனாங்கொல்லையில் 32 எம்.வி.ஏ., திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கும் பூர்வாங்க பணி துவங்கப்பட்டிருப்பதால் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் தியாகதுருகம் துணை மின் நிலையங்களில் இருந்து ஜி.அரியூர், மேமாளூர், செங்கனாங்கொல்லை, பொன்னியந்தல், ரிஷிவந்தியம், காட்டுசெல்லூர் என 50க் கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது துணை மின் நிலையங்களில் இருந்து இக்கிராமங்கள் வெகு தூரத்தில் இருப்பதாலும், இதன் மொத்த தேவை 100 மெகா வாட்டாக அதிகரித்திருப்பதும் தான் சிக்கலுக்கு ஏற்படுகிறது.

திருக்கோவிலூர் துணை மின் நிலையம் 50 எம்.வி.ஏ., திறனும், தியாகதுருகத்தில் 32 எம்.வி.ஏ., திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் உள்ளது. எனவே 18 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை சமாளிக்க ஷிப்ட் முறையில் கிராம பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. திருக்கோவிலூர் நகரில் அதிகரித்திருக்கும் மின் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஷிப்ட் முறையில் மின்விநியோகம் செய்வதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், குறைந்தழுத்த மின் வினியோகம் மின்சாதனங்களை பழுதடையச் செய்கிறது.

மின் தேவை அதிகரிப்பால் எழுந்திருக்கும் பிரச்னையை சமாளிக்க செங்கனாங்கொல்லையில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 23 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டு முறைப்படி மின் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காட்டுச்செல்லுார் துணை மின் நிலையம் என்ற பெயரில், 10 எம்.வி.ஏ., திறன் கொண்ட இரண்டு டிரான்ஸ்பார்மர் பொருத்தி, துணை மின் நிலையம் அமைக்க மின் துறையால் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும் இத்திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.

விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் இதுகுறித்து சட்டசபையில் வலியுறுத்தி பேசினார். அவரது பெரும் முயற்சியில் 16 கோடி ரூபாய் மதிப்பில் 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட இரண்டு டிரான்ஸ்பார்மர் அதாவது 32 எம்.வி.ஏ., திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் செங்கன்கொல்லையில் அமைக்க மின்துறையால் அனுமதி பெறப்பட்டு, கட்டமைப்பு பணிகளுக்கான டென்டர் விடப்பட்டுள்ளது.

வரும் மார்ச் மாதத்திற்குள் பணியை முடித்து மக்களின் மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர மின் துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அமைய உள்ள புதிய துணை மின் நிலையத்திற்கு விழுப்புரம் மற்றும் சங்கராபுரம் தானியங்கி துணை மின் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின்சாரம் கொண்டு சென்று தடை இன்றி மின்விநியோகம் செய்ய உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கான இடங்களை தேர்வு செய்து, கையகப்படுத்தும் பணியில் மின்துறை கவனம் செலுத்தி வருகிறது.

பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் இப்பகுதி மக்களின் 23 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் திருக்கோவிலூர் துணை மின் நிலையத்திலிருந்து 15 எம்.வி.ஏ., தியாகதுருகத்தில் இருந்து 10 எம்.வி.ஏ., திறன் மின்சாரம் பயன்படுத்தும் பகுதிகள் விடுவிக்கப்பட்டு, புதிய துணை மின் நிலையத்திற்கு மாற்றப்படும். அப்பொழுது ரிஷிவந்தியம் பகுதியில் ஏற்படும் மின்தடை முழுமையாக விளக்கிக் கொள்ளப்படுவதுடன், திருக்கோவிலூர், தியாகதுருகம் பகுதிகளுக்கு தேவையான மின்சாரம் விநியோகம் செய்ய முடியும்.

ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுவதற்கான பணிகள் துவங்கி இருப்பது விவசாயிகளையும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us