தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பாராட்டு

குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பாராட்டு

குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பாராட்டு


UPDATED : நவ 10, 2026 07:27 PM

ADDED : நவ 10, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 07:27 PM ADDED : நவ 10, 2026 07:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்தது.

கள்ளக்குறிச்சி நகராட்சி குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி திடக்கழிவுகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு மற்றும் சிறப்பு கவன கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வீட்டு உரிமையாளர்களை பாராட்டும் விதமாக ‘எழில்மிகு கல்லையை உருவாக்குவோம்’ என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் பானுமதி தலைமையில் வார்டு 18–ல் கவரை தெரு பகுதியில் இப்பணிகள் நேற்று துவங்கியது. நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர்கள், நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். இப்பணிகள் நகராட்சியின் 21 வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us