நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே மின் கசிவு காரணமாக ஓட்டு வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி மணியம்மாள், 62; இவர், அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது ஓடு வேய்ந்த வீட்டிற்குள் மின் கசிவு காரணமாக தீ பிடித்தது.
தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. வடபொன்பரப்பி போலீசார் சேத மதிப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.