/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு
/
மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு
ADDED : டிச 11, 2025 05:52 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டி.ஆர்.ஓ., தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
இதில் மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடன் நடந்து கொள்வேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பேன். மனித உரிமைகளை பாதுக்கும் வகையில், கடமைகளை ஆற்றுவேன். பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

