/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை; விழா மேடை அமைக்கும் பணிகள் ஆய்வு
/
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை; விழா மேடை அமைக்கும் பணிகள் ஆய்வு
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை; விழா மேடை அமைக்கும் பணிகள் ஆய்வு
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை; விழா மேடை அமைக்கும் பணிகள் ஆய்வு
ADDED : டிச 11, 2025 05:52 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி வீரசோழபுரத்தில் விழா மேடை அமைக்கும் பணிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் அமைக்கப்படும் புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 27 திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதனையொட்டி சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வீரசோழபுரம் பகுதியில் விழா மேடை அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதில் விழா மேடை அமைக்கும் இடம், பயனாளிகள் அமரும் இடம், முக்கிய பிரமுகர்கள் வருகை, வாகனம் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல், காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
பின்னர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பான விழா மேடை அமைத்தல் உள்ளிட்ட பிற பணிகளை திட்டமிட்டு சிறப்பாக மேற்கொள்வதுடன், மேடை அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் உரிய ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது எஸ்.பி., மாதவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாலா உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

