/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செல்லம்பட்டில் நுாலக வார விழா
/
செல்லம்பட்டில் நுாலக வார விழா
ADDED : டிச 10, 2025 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த செல்லம்பட்டு கிளை நுாலகத்தில் 58 வது நுாலக வார விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட நுாலக ஆய்வாளர் சங்கரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அறிவழகி முன்னிலை வகித்தார். செல்லம்பட்டு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நுாலக ஆய்வாளர் சங்கரன் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வாசகர்கள் வெங்கடேசன், அழகப்பிள்ளை, முனுசாமி வாழ்த்துரை வழங்கினர்.
நுாலகர் ஜானர்த்தனன் நன்றி கூறினார்.

