/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாத்தனுார் அணை இந்த ஆண்டு 119 அடியை எட்டுமா? கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை
/
சாத்தனுார் அணை இந்த ஆண்டு 119 அடியை எட்டுமா? கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை
சாத்தனுார் அணை இந்த ஆண்டு 119 அடியை எட்டுமா? கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை
சாத்தனுார் அணை இந்த ஆண்டு 119 அடியை எட்டுமா? கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை
ADDED : டிச 10, 2025 08:33 AM
திருக்கோவிலுார்: வடகிழக்கு பருவமழை திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு பெய்யாததால் தென்பெண்ணையில் தண்ணீர் வரத்து நின்று போய் உள்ளது.
கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலைப்பகுதியில் உருவாகும் தென்பெண்ணை தமிழக எல்லையான கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணையை கடந்து பாய்ந்தோடி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. பெரும்பாலும் ஜூலை மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை 9 மாதங்கள் தென்பெண்ணையில் தண்ணீர் செல்லும்.
அதன் பிறகு சாத்தனூர் அணை திறக்கப்பட்டால் திருக்கோவிலுார், எல்லீஸ் தடுப்பணைகள் மூலம் நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு தண்ணீர் சென்று முப்போக சாகுபடி நடக்கும். கடந்தாண்டு டிச., மாதம் தென்பெண்ணையில் இரு கரை தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து சென்றது. அதீத கனமழை காரணமாக 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்ததால் பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தனுார் அணையில் மொத்தமுள்ள 119 அடி, 7,321 மில்லியன் கன அடியில், 116 அடி நீர் இருப்பு பராமரிக்கப்பட்டு வந்தது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் குறைந்ததால் அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் நிறுத்தப்பட்டது. இதனால், அணையின் உயரம் 117 அடியாக உ யர்ந்து இருந்தது.
டிட்வா புயல் முன்னெ ச்சரிக்கையாக, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, 115 அடியாக பராமரிக்கப்பட்டது.
ஆனால், கணிக்கப்பட்ட அளவில் மழை பெய்யாதால், கடந்த சில நாட்களாக அணையில் இருந்து திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டது. 116.40 அடி, 6,744 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்தது. அணைக்கு 382 கன அடி நீர் வருகிறது.
பருவ மழையை எதிர்பார்த்து கடந்த ஆண்டை போல் வெள்ளம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வரும் நாட்களில் மழை எதிர்பார்த்த அளவில் இன்றி குறைந்தால் அணையின் முழு கொள்ளளவான 119 அடியை எட்டுவது இந்த ஆண்டு சிரமம்.
இம்மாத இறுதியில் மழைப்பொழிவு சீராக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தபடி மழை பெய்தால் மட்டுமே சாத்தனுார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும். இந்த சூழலில் தென்பெண்ணையாற்றில் லேசான அளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பது விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

