/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் குதித்து கணவர் தற்கொலை: மனைவி புகார்
/
கிணற்றில் குதித்து கணவர் தற்கொலை: மனைவி புகார்
ADDED : நவ 01, 2024 11:18 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே குடும்பத் தகராறில் கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் மகாதேவன், 35; நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாய் தகராறில், ஆத்திரமடைந்து அவரது வயல்வெளியில் இருக்கும் கிணற்றில் குதித்து நீரில் மூழ்கி இறந்தார்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி, மகாதேவன் உடலை மீட்டனர்.
இது குறித்து அவரது மனைவி செல்வி, 33; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.