ADDED : மார் 30, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் பஷீர்அகமது மகன் அமானுல்லா, 44; காரனுார் பஸ்நிறுத்தத்தில் டீ கடை வைத்துள்ளார். இவருக்கு கடன் பிரச்னை உள்ளது. கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அமானுல்லா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடன் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி தவுலத்பீ புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.