/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்
/
மாணவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்
ADDED : செப் 14, 2025 02:47 AM

இப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்து அதே பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருப்பது பெருமையாக கருதுகிறேன். பொறுப்பேற்ற பின்பு, இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்து, தற்போது கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
என்னால் முடிந்தவரை மாணவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்து வருகிறேன். பள்ளியில் உள்ள இருபால் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் நல்ல ஒத்துழைப்பு தருவதால் பள்ளியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறேன்.
பள்ளிக்கு வராத மாணவர்களை கணக்கெடுத்து நேரடியாக அவர்கள் வீட்டுக்குச் சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து படிக்கச் செய்கிறேன்.
மாணவர்கள் விளையாட்டு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். எம் பள்ளி எம் மாணவர்கள் வெற்றிக்கு நான் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன்.
துரைவேலன். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்