/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
86,560 விவசாயிகளுக்கு அடையாள எண்கள்
/
86,560 விவசாயிகளுக்கு அடையாள எண்கள்
ADDED : ஏப் 04, 2025 04:40 AM
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் 86 ஆயிரத்து 560 விவசாயிகளுக்கு, தனி அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக, வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 86 ஆயிரத்து 560 விவசாயிகளுக்கு மேல் முகாம்களில் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை அடையாள எண் பெறாத மீதமுள்ள 76 ஆயிரத்து 450 விவசாயிகள் ஆதார் எண், நில சிட்டா நகல்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையம் மற்றும் கிராமங்களில் முகாம் நடக்கும் இடங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த பதிவு மேற்கொள்ள வரும் 15ம் தேதி கடைசி நாள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

