/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு துவக்க விழா
/
திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு துவக்க விழா
திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு துவக்க விழா
திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 30, 2025 05:52 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லுாரியில் திருக்குறள் திருப்பணித் திட்ட பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லுாரியில் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு துவக்க விழாவிற்கு, கல்லூரி முதல்வர் மகாவிஷ்ணு தலைமை தாங்கினார். முத்தமிழ் முத்தன் வரவேற்றார். பேராசிரியர்கள் மன்னார்சாமி, கார்த்திகேயன், சீனு, ராஜா முன்னிலை வகித்தனர். கலெக்டர் தலைமையிலான திருக்குறள் திருப்பணி குழு உறுப்பினர்கள் புலவர் மோகன், கவிஞர் சாந்தகுமார் சிறப்புரையாற்றினர். மாணவர்களுக்கு திருக்குறள் குறித்த வினாடி - வினா போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாசகர் வட்ட குழு தலைவர் உதியன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சித் துறை இளநிலை உதவியாளர் தமிழ்ச்செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.