/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெயில் தாக்கம் அதிகரிப்பு; மாவட்டத்தில் மக்கள் தவிப்பு
/
வெயில் தாக்கம் அதிகரிப்பு; மாவட்டத்தில் மக்கள் தவிப்பு
வெயில் தாக்கம் அதிகரிப்பு; மாவட்டத்தில் மக்கள் தவிப்பு
வெயில் தாக்கம் அதிகரிப்பு; மாவட்டத்தில் மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 15, 2025 06:31 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் சிலர் குடைபிடித்துவாறு செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி கடைவீதியில் பொதுமக்களின் நடமாட்டம் எப்போதும் அதிகளவில் காணப்படும். தற்போது வெயிலின் தாக்கத்தால் மிக குறைந்த அளவிலான நடமாட்டம் மட்டுமே காணப்படுகிறது. மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்த பின்பு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வருகின்றனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.