/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா
/
சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 18, 2025 12:25 AM
சின்னசேலம்; சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலகுரு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அலுவலர்கள் ராமசாமி, நளினி, கனக பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் சுமதி, சவுரிராஜன் தலைமையில் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தேசிய கொடியேற்றி வைத்தார். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் காந்தி உருவபடத்திற்கு மலர்துவி மரியாதை செலுத்தினார். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் தேசிய கொடியேற்றி வைத்தார்.
அதேபோல் சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் நிலைய அலுவலர் ராகேஷ் குமார் கொடியேற்றினார். அம்மையாரகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் கொடியேற்றினார். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாசவி வனிதா கிளப் சங்க நிர்வாகிகள் வேல்மணி, பரணி, ரமேஷ், ஜெயலஷ்மி ஆகியோர்கள் சான்றிதழ் வழங்கினர்.
சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மணிகண்டன், மேல்நாரியப்பனுர் அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், இதயா மகளிர் பொறியியல் கல்லுாரியில் செயலாளர் ஜான்சி மேரி கொடியேற்றினர்.