/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 15, 2025 10:52 PM

ரிஷிவந்தியம், ; ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பகண்டைகூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தேசிய கொடியேற்றப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி தலைவர் தீபா அய்யனார், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் வரவேற்றார். நீலமங்கலம் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். துணைத் தலைவர் அசோககன் என்.சி.சி., கொடியற்றி வைத்தார்.
விழாவில் மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளியின் பிரிவு முதல்வர்கள் பிரேமா அன்பழகன், செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். முதுகலை தமிழாசிரியர் சதிஷ் நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சாந்தி, சசிகலா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பொது வினியோக திட்ட கண்காணிப்பாளர் ரகு மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
பங்காரம் லட்சுமி கல்லுாரி பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குநர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். பங்காரம் ஊராட்சி தலைவர் பாஞ்சாலை கண்ணன் தேசிய கொடியேற்றினார்.
கல்லுாரி முதல்வர்கள் பாஸ்கரன், பழனியம்மாள் சுதந்திர தின உரையாற்றினர். மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. துணை முதல்வர் சக்திவேல் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் ராஜவேல் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் முருகன், ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயக்குமார், கணேசன், லஷ்மிசக்திவேல், சந்திரலேகா பாக்யராஜ், பழனிவேல், விமலாசெந்தில், பர்வீன்சர்தார், ராதாமனோகர், உமாராணிசண்முகம், சக்கரவர்த்தி, தங்கமணி மற்றும் அலுவலர்கள். மாணவர்கள் பங்கேற்றனர்.