ADDED : அக் 30, 2025 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்:  எல்ராம்பட்டு கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பாக இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் ஒன்றியம், எல்ராம்பட்டு ஊராட்சியில் தோப்பு தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம், கிளைச் செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் அஞ்சாமணி, மாநில குழு உறுப்பினர் கணேசன் உள்ளிட்ட பலரும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

